தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.
கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும் அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அமைப்பின் கோவை மாவட்ட கிளை பொதுச் செயலாளர் தலைமையில் மனு அளிக்க வந்தவர்கள் கோவையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
அவர்களது கோரிக்கைகள் பின்வருமாறு:-
1. 2016ம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும்.
2. ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
3. ஓய்வூதியத்திற்கு அரசாங்கம் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
4. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
5. மருத்துவப்படியை 100 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.
6. குடும்ப ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.