கோவையில் பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு..!

தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர முதலமை‌ச்ச‌ருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.

கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும் அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென முதலமை‌ச்ச‌ருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



அமைப்பின் கோவை மாவட்ட கிளை பொதுச் செயலாளர் தலைமையில் மனு அளிக்க வந்தவர்கள் கோவையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கைகள் பின்வருமாறு:-

1. 2016ம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும்.

2. ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

3. ஓய்வூதியத்திற்கு அரசாங்கம் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

4. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

5. மருத்துவப்படியை 100 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.

6. குடும்ப ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...