நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு தலைமையகத்தில் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.


கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு தலைமையகத்தில் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் கூடியது. தலைமை நிர்வாகக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



நீண்டகால சிறைவாசிகள் விடுதலைக்குப் பரிந்துரை குழு: நீண்டகாலமாகச் சிறையில் வாடும் சிறைவாசிகளின் நிலை மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரங்கள் குறித்து மிகுந்த அக்கறையோடு நிர்வாக குழு விவாதித்தது. கடந்த காலங்களில் சிறைவாசிகளின் முன் விடுதலையின் போது, முஸ்லிம் கைதிகள் பாரபட்சம் காட்டப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட அவலநிலை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து அவர்களின் நன்னடத்தை, உடல் நிலை, மன நிலை, உடல் ஆரோக்கியம், தற்போது உள்ள சூழ்நிலை என அனைத்தும் அறியும் வகையில் முன் விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை நிர்வாக குழு வரவேற்கிறது.

தமிழக அரசு அமைத்துள்ள இந்த குழுவின் கால வரம்பை அதிக பட்சம் மூன்று மாதங்களுக்குள்ளாக என்று நிர்ணயிக்க வேண்டும் என்றும் இந்த ஆணையத்தின் கால வரம்பு முடிவடைந்து பரிந்துரைகள் வரும் வரை 60 வயதைக் கடந்த வயது முதிர்ந்த, மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு நீண்ட நாள் பரோல் அளிக்கப் பட வேண்டும் என்றும் தலைமை நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.

பெண்களின் திருமண வயது: ஒன்றிய பாஜக அரசு பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தியிருப்பது முற்றிலும் மோசடியான, திசைதிருப்பும் செயலாக உள்ளது. 18 வயது வாக்களிப்பதற்கும், ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கும் தகுதியானதாக உள்ளபோது, திருமணத்திற்குத் தகுதியில்லை என்றாக்குவது, பெரும்பான்மையான மக்களைக் குற்றவாளிகளாய் ஆக்கும் நோக்கில் உள்ளது .என நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.

உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...