அவிநாசி அருகே சேற்றில் சிக்கிய பசுமாடு 4-நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஒடை சேற்றில் சிக்கிய பசுமாடு 4-நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து, மாடு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து சிகிச்சையளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது.


அவிநாசி: அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஒடை சேற்றில் சிக்கிய பசுமாடு 4- நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

அவிநாசி அருகே நடுவச்சேரி ராயம்பாளையம் ஒடை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று கடந்த திங்கள்கிழமை சேற்றில் சிக்கியது. இந்த மாடை உரிமையாளர் மீட்க இயலாமல் அப்படியே விட்டுச் சென்று விட்டார்.

இந்நிலையில், இதனை பார்த்த அப்பகுதியை ராஜேந்திரன், நான்கு நாட்கள் சேற்றில் இருக்கும் மாட்டை மாட்டை உடனடியாக மீட்குமாறு உரிமையாளர் ஜெயராமிடம் முறையிட்டுள்ளார். அதற்கு ஜெயராமன் மாட்டை உரிய விலை கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுமாறு ராஜேந்திரனிடம் கூறினார்.

இதை அடுத்து ராஜேந்திரன் மாட்டை வாங்கி பொதுமக்கள் உதவியுடன் மீட்க முயன்றார் முயற்சி தோல்வியுற்றது.



இதை அடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி, வெள்ளிக்கிழமை சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கிரேன் இயந்திரம் மூலம் சேற்றில் சிக்கிய மாட்டை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்தனர்.

இதையடுத்து, மாடு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து சிகிச்சையளித்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 4-நாள்களுக்குப் பிறகு சேற்றில் சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...