திருப்பூரில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 16-ஆண்டு சிறை தண்டனை

16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தைக்கு 16-ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000-அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர்: 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தைக்கு 16-ஆண்டு சிறை ரூபாய் 25,000-அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் அவிநாசி ரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 24/11/2020 ஆம் தேதி சிறுமியின் தந்தை சந்திரன் 39 என்பவர் அடித்துக் காயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் உப் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி சிறுமியின் தந்தை சந்திரனுக்கு போஸ்கோ பிரிவின் கீழ் 14 ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் என மொத்தம் 16 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 25,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...