கோவையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்தக்கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளையும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பு தூண்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை: கோவையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்தக்கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு குறித்து தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கூறுகையில்;-

ஆர்.எஸ்.எஸ்.யின் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற இந்துத்துவா அமைப்பின் பயிற்சி முகாம் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளையும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பு தூண்டி வருகிறது.

இந்த அமைப்பு 13 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்கள் பங்கேற்கலாம் என்றும், பயிற்சி செய்வதற்கு சுடிதார் கண்டிப்பாக கொண்டுவரவும் என்றும் நிபந்தனை விதித்து இருப்பதாகவும், தமிழக அரசுக்கும், அனைத்து மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது.

கோவையில் மதக்கலவரங்கள் நடப்பதற்கான அபாயகரமான பகுதியாக உள்ளது. எனவே, தனியார் கல்லூரியில் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பின் மதவெறி ஆயுதப் பயிற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தார்

இதில் தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மனுவை அளித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...