கோவையில் வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான கார் பறிமுதல்..! கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை..!

கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி நடத்திய விசாரணையில், பயணிகளிடம் ரூ. 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது.


கோவை: கோவையில் வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு வெள்ளை நிறமும், வர்த்தக பயன்பாட்டுக்காக மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சொந்த பயன்பாட்டுக்கான கார்களை வர்த்தக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், வாடகைக்கு விடப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான ஒரு காரை கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை சிட்டி கால்டேக்ஸி சங்கத்தினரின் புகாரைத் தொடர்ந்து கணபதியில் இருந்து உக்கடம் நோக்கி இரு பயணிகளுடன் சென்ற காரை நிறுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பயணித்தவர்களிடம் ரூபாய் 300 வாடகை பேசி அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், உரிமையாளரிடம் கார் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஆவணங்கள் ஏதும் இல்லையெனில் அதற்கும் சேர்த்து கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...