கோவை துடியலூர் பகுதியில் பத்திரத்தை சீட்டு கம்பெனியில் அடகு வைத்து 50 லட்சம் மோசடி செய்த நபர் கைது..!

புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதியில் பத்திரத்தை சீட்டு கம்பெனியில் அடகு வைத்து 50 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் சூரியகுமார் (48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சத்திற்கான இரண்டு சீட்டுகள் போட்டிருந்தார்.

நிறுவன மேலாளர் சரவண செல்வன் (49), சீட்டு பணத்துக்கு உத்தரவாதமாக சூரியகுமாரின் வீட்டு பத்திரத்தை பெற்றுள்ளார்.

கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சரவணன் செல்வன் முறைகேடாக சூரியகுமாரின் வீட்டு பத்திரத்தை அதே நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூபாய் 50 லட்சம் பெற்றுள்ளார்.

இதனிடையே, கடனுக்கு வட்டி தொகை திருப்பி செலுத்தாததால் சூரிய குமாருக்கு ஏல நோட்டீஸ் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியகுமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...