கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!

கடத்தலில் ஈடுபட்ட அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

கோவை மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை பொள்ளாச்சி யூனிட் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் வாகன சோதனையில் செய்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் பாலக்காடு சித்தூரை சேர்ந்த அப்பு என்கிற அபுதாகிர் (32) என்பதும் ஆத்துப்பாலம் அருகே தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

பின்னர், வாகனம் மற்றும் 30 மூட்டைகளில் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, அபுதாஹீரை கைது செய்த போலீசார் கடத்தலில் தொடர்புடைய செலினா மற்றும் கேரளாவில் அரிசி வாங்கும் நூர்குட்டியை தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...