கோவையில் வரும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் விழாவில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது..!

நவீன தமிழிலக்கியத்திற்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளை கவுரவிக்கும் விதமாக ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: 2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், தெலுங்குக் கவிஞர் வடரேவு வீரபத்ருடு, இயக்குனர் வசந்த் எஸ். சாய், எழுத்தாளர் சோ.தருமன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

நவீன தமிழிலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளை கவுரவிக்கும் விதமாக ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருதுச் சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ. 2,00,000/-விருதுத் தொகையும் உள்ளடக்கியது.

விருது பெறும் எழுத்தாளுமை பற்றிய ஆவணப்படமும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்படும். விருதாளரின் படைப்புகள் குறித்து இலக்கிய அமர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் டிசம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு நிகழ்வு தொடங்கும்.

கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய விபரங்கள்:

கவிஞர் விக்ரமாதித்யன் 25/09/1947-ல் திருநெல்வேலியில் பிறந்தார். இவரது இயற்பெயர் நம்பிராஜன். இவர் சோதனை, அஸ்வினி, தராசு, நக்கீரன், இதயம் பேசுகிறது ஆகிய பத்திரிகைகளில் சில காலம் பணிபுரிந்தார். நவீன கவிதையில் தமிழ் மரபு சார்ந்த படிமங்களையும், தமிழ் மரபுக்குரிய மொழியோட்டத்தையும் கொண்டு வந்தவரென இவரைச் சொல்லலாம். இறுக்கமான படிமச்செறிவுக்கும், இசையற்ற கூற்றுமொழிக்கும் மாற்றாக இவரது கவிதைகள் விளங்கின. விளக்கு விருது, சாரல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நூல்களின் பட்டியல்:-

ஆதி

கிரகயுத்தம்

கங்கோத்ரி

சொல்லிடில் எல்லை இல்லை

நூறு எண்ணுவதற்குள்

சாயல் எனப்படுவது யாதெனின்

சும்மா இருக்கவிடாத காற்று

கவிதையும் கத்தரிக்காயும்

அவன் அவள்

திருஉத்தரகோசமங்கை

ஊழ்

உள்வாங்கும் உலகம்

ஆகாசம் நீல நிறம்

மஹாகவிகள் ரதோற்சவம்

சேகர் சைக்கிள் ஷாப்

எழுத்து சொல் பொருள்

காடாறு மாதம் நாடாறு மாதம் - வரலாற்றுக் கட்டுரைகள்

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...