கோவை - பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி கோவில் எதிரே ப்ளூ ஸ்டார் பழமுதிர் நிலையம் மற்றும் அருகில் உள்ள கடைகளின் மேற்கூரையை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை.
கோவை: கோவை அருகே கடையின் மேற்கூரையை உடைத்து 3 கடைகளுக்கு சென்று கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி கோவில் எதிரே பேருந்து நிலையம் உள்ளது.
இங்கு இருந்த ப்ளூ ஸ்டார் பழமுதிர் நிலையம் மற்றும் அருகில் உள்ள பெட்டிக் கடையின் மேற்கூரை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பொருள்கள் மற்றும் கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவ இடத்தில் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றன.
நன்கு அறிமுகம் ஆன நபர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என்று போலீசார் சந்தேகிப்பதால், பழைய குற்றவாளிகளின் கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.