பாதிக்கப்பட்ட உறவினர்களின் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் கேரளா - கோவை மாவட்ட எல்லையான வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கேரளாவில் 11 பேருக்கு 'ஒமைக்ரான்' உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்த, 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட உறவினர்களின் மூலம் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதை கருத்தில் கொண்டு, கேரளா - கோவை மாவட்ட எல்லையான வாளையாறு பகுதியில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'கேரளாவில் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் வாளையாறு பகுதியில் போலீஸ், வருவாய், சுகாதாரத்துறை சார்பில் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டு 'டோஸ்' செலுத்திய சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., 'நெகட்டிவ்' சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, கால்நடைத்துறை சார்பில், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.