வாலாங்குளம் அருகே மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலி

வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்ற போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு, பாலத்தின் அருகிலிருந்த சுவரில் சாய்ந்தவாறு நின்ற போது நிலைத்தடுமாறி மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வாலாங்குளம் அருகே மனைவி கண் முன்னே கணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரில் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்தவர் காட்வின் (29), இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி வேளாங்கண்ணி பெட்சி கேத்தரின் (27), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காட்வின் குழந்தைப் பருவத்திலிருந்தே மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவில் தனது மனைவியுடன் பைக்கில் உக்கடம் வாலாங்குளம் சாலை ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது.

தொடர்ந்து பைக்கை நிறுத்திய காட்வின் பாலத்தின் அருகில் சுவரில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார்.

இதனைப் பார்த்துக் கதறி மனைவி கூச்சல் போட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் ஓடிவந்துமீட்டு நீரிலிருந்து மேலே தூக்கி வந்தனர்.

பின்னர் உடனே அவரை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண் முன்பு கணவன் நீரில் மூழ்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...