நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை..!

மேலும், விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்காகப் போராடி உழவர் பெருந்தலைவர் என அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயண சாமி நாயுடுவின் நினைவு அஞ்சலியானது நடைபெற்றது.

இதில் அவரது புகைப்படத்திற்கு விவசாய சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நாராயணசாமி நாயுடுவின் நினைவுநாளை விவசாயிகள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் தென்னை தொழில் நெருக்கடியில் உள்ள நிலையை தமிழக அரசு போக்க வேண்டும் எனவும் விவசாய தலைவர்கள் குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...