கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் வெட்டி கொலை..! 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரத்தினபுரி மற்றும் கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த குழுக்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் ஸ்ரீராம் என்கிற குரங்கு ஸ்ரீராம் (22), இவர் நேற்று இரவு 9 மணி அளவில் தனது நண்பர்கள் கவாஸ்கான் (23) உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் அருகே வந்தபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்களை வழிமறித்தது. இதில் அச்சம் அடைந்த அவர்கள் இருவரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.

இருப்பினும், அந்த கும்பல் அவர்களை 2 கிலோ மீட்டர் தூரம் வரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றது. இதில் ஒரு கோழி கடை அருகே ஸ்ரீராமை மடக்கிப் பிடித்த அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மேலும் இந்த சம்பவத்தை கண்டதும் பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்தபடி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கோவை தெற்கு காவல்துறை துணை ஆணையர் உமா, காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்தமிழ், உதவிஆய்வாளர் சரத்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரத்தினபுரி மற்றும் கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த குழுக்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...