மேம்பாலப்பணிக்காக உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் இடிப்பு

96-வீடுகள் இடிக்கப்பட்டு புல்லுக்காடு பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டு விட்டன. கோரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதால் அனைவரும் புதிய வீடுகளுக்குச் சென்று விட்டனர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: மேம்பாலப்பணிக்காக உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டது.

கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் உக்கடம் பெரிய குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகளுக்காகவும், மேம்பாலப் பணிகளுக்காகவும் உக்கடம் சலவைத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள 96-வீடுகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், சலவைத் தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் இடம்பெயர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

தங்களது பகுதியில் துணிகளைத் துவைக்கவும், காய வைக்கவும் உள்ள வசதிகள் புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் இல்லை, மாநகராட்சி இந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் மத்திய மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரி மணிவண்ணன் மற்றும் உக்கடம் போலீசார் சலவைத் தொழிலாளர் குடியிருப்புக்குச் சென்று பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அங்கிருந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இங்கிருந்த 96 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் புல்லுக்காடு பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டு விட்டன. அவர்கள் கோரிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. கோரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதால் அனைவரும் புதிய வீடுகளுக்குச் சென்று விட்டனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, 'என்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...