போக்சோ வழக்கு: பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்தநபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் மீது முன்விரோதம் காரணமாகத் தனது சகோதரியின்குழந்தையை வைத்துக் கடந்த 2020 ம் ஆண்டு பொய்யான போக்சோ புகார் அளித்துள்ளார்.



இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை நீதிபதி சுகந்தி விசாரித்துப் பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பொய் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்தசங்கர் என்பவரின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 22ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். போக்சோ சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்ட 2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்தியாவில் முதல்முறையாகப் பொய்யான போக்சோ புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கத் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...