கோவை நீலாம்புரில் மூன்று கல்லூரி மற்றும் அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்று மோதியதில் நான்கு மாணவர் உள்பட 6 பேர் காயம்..!

விபத்து குறித்து சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே நீலாம்பூரில்மூன்று கல்லூரி பேருந்துகளுக்கு பின்னால் வந்த அரசு பேருந்து பின்பக்கமாக மோதியதில், கல்லூரி வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன. இதில் பேருந்தில், பயணம் செய்த 2 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்துகள் இன்று மாலை கல்லூரியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சூலூர், பல்லடம், திருப்பூர் ஆகிய இடங்களில் மாணவர்களை இறக்கி விடுவதற்காக சென்று கொண்டிருந்தன. அப்போது அவர்களுக்கு எதிர்திசையில் தவறான பாதையில் ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. இதனை பார்த்த பேருந்தின் ஓட்டுனர் இருசக்கர வாகனத்திற்கு வழிவிட, பேருந்தை இடதுபுறம் திருப்ப முற்பட்டபோது அங்கு ஒரு கண்டெய்னர் லாரி சாலையில் நின்று கொண்டிருந்ததால்,கல்லூரி பேருந்தின் ஓட்டுனர்திடீரென சாலையில் பேருந்தை நிறுத்தியுள்ளாதாக கூறப்படுகிறது.



இதனையடுத்து, அந்த பேருந்துக்குபின்னால் வந்த இரு கல்லூரி பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக திடீரென ப்ரேக் அடித்து நின்றன. அப்போது, அவ்வழியே அவிநாசிநோக்கி வந்த அரசுப்பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடைசியாக நின்றிருந்த கல்லூரிப் பேருந்தின் பின்னால் மோதியது.

இதனால், நின்று கொண்டிருந்த மூன்று கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அரசு பேருந்தில் சென்ற இரண்டு பயணிகள் மற்றும் கல்லூரிப் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.



இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற சூலூர் போலீசார் கல்லூரிப் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்ப்படுத்தினர். விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவ - மாணவியர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்தார். சூலூர் போலீசார் இது சமந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...