கோவையில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு பணம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

தூய்மை பணியாளர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் ஒதுக்கீடு செய்து தர வேண்டியும், குடியிருப்புகளுக்கு பணம் கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என நியு சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், நியு சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த 45 ஆண்டுகளாக குடியிருந்து வந்த நிலையில், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் அதனை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருவதாகவும் அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை என கூறியதாகவும் 18 மாத காலத்தில் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேலாக வீடுகளை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.



மேலும், மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அதிகாரிகள் கேட்கும் தொகையை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் எனவும் வீடுகளை உடனடியாக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களாகவும் ஒப்பந்த பணியாளர்களாகவும் இருந்துவரும் நிலையில், அதிகாரிகள் பணம் செலுத்தக் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...