கோவையில் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி மாடுகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்திச் செல்வதாக ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.


கோவை: கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாடுகளுடன் வந்து கோவை ஆட்சியரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.

நாட்டுமாடுகளையும், கால்நடைகளையும் இறைச்சிக்காக விதிகளை மீறி கோவையில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் கேரளாவிற்கு கடத்துவதாகவும் அதனை தடுக்க வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் மணிகண்டன் தலைமையில் மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் சட்டவிரோதமாக நாட்டு மாடுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் கடத்துவதாகவும் போக்குவரத்து சட்டத்தில் 5 மாடுகள் வரை கொண்டு செல்லலாம் என சட்டம் உள்ள நிலையில், ஒரு லாரியில் 30 மாடுகளை அடைத்து கடத்தி செல்வதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட கால்நடை இயக்குநர், மிருகவதை தடுப்பு குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...