கிணத்துக்கடவு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!

சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த பள்ளியில் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பள்ளியில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 2-ம் கட்டமாக 10 ,11, 12 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது .

இதனால் பள்ளிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தற்போது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...