தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது- தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்

தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும் தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும் தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் தண்ணீர் மனிதர் என அழைக்கக் கூடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா முழுவதும் நதி மற்றும் ஆற்று வளங்களைப் பாதுகாப்பது அவசியமாக இருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நதி மற்றும் ஆறுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பதாகவும் ஆற்று வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேட்டியளித்தார்.



ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மையை மேம்படுத்த முடியாது எனவும்,குறிப்பாகத் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தச் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறு மற்றும் நதிகளிலே உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள்,நகரக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயார் செய்து தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...