பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3-பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 700-கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், போலீசார் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள செடிமுத்தூர் கிராமம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனங்களில், கேரளாவுக்குக் கடத்த முயன்ற சுமார் 700-கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது.

பின்னர், ரேஷன் அரிசியைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்த பொள்ளாச்சி குப்புச்சாமி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), அவரது மனைவிபத்மாவதி(50), அதே வீதியைச் சேர்ந்த குமரன் (48), குமரன் நகரைச் சேர்ந்த 16-வயது சிறுவன், ராஜா மில் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (28), கேரளா மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(37), மற்றும் கேரளாவை சேர்ந்த தீபக் (21)ஆகிய 7- பேரையும் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 5-இருசக்கர வாகனங்களையும், 700-கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...