கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் பயணம் முடிந்து அந்தந்த எல்லைக்குட்பட்ட டிப்போக்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று இரவு சிங்காநல்லூரிலிருந்து ஒண்டிபுதூர் டிப்போவிற்கு இரண்டாம் நம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய மூன்று பேர் நடத்துனரிடம் தகராற்றில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தை சூலூருக்கு இயக்கும்படி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர் பேருந்து வேறு எங்கும் செல்லாது, டிப்போவுக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த இருவர் நடத்துனர் கவியரசன் மீது தாங்கள் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் பேருந்திலிருந்து தப்பித்துச் சென்றனர்.

பின்னர் நடத்துனர் கவியரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் குற்றவாளியை விரைந்து பிடிக்கும்படி சிங்காநல்லூரில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் சிங்காநல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...