சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டும்- கிணத்துக்கடவில் தீர்மானம் நிறைவேற்றம்

சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டி, கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக அகலப்படுத்த வேண்டி, கிணத்துக்கடவில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பு (எ) கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும், அண்ணாநகர் பகுதியிலிருந்து பகவதி பாளையம் செல்லும் சாலையைப் புதுப்பிக்க வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி அகலப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி பார்வையாளர் சாந்தகுமார், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ராமகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய பொதுச்செயலாளர் சுந்தர்ராஜு உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...