கோவை அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட 3 கோவில்கள் இடித்து அகற்றம்..!

குட்டை புறம்போக்கு இடத்தில் கட்டியுள்ள கோவில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை அருகே சூலூரில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டிணம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் வாசுதேவன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குட்டை புறம்போக்கு இடத்தில் மண்ணை கொட்டி மேலும் 7 கோவில்கள் கட்டப்பட்டன.

இதை எதிர்த்து குட்டையின் அருகே இருந்த விவசாயிகள் தங்கள் பூமிக்குச் செல்லும் வழித்தடத்தை அமைத்துத் தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். புறம்போக்கு இடத்தில் கட்டி உள்ள கோயில்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் சூலூர் வருவாய் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்னக்கொடி, ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தனர்.

இதையடுத்து, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர், நவநீதகிருஷ்ணன் உளவுப் பிரிவு காவலர் சந்துரு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி காவலர்கள் அனுசியா உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த 3 கோயில்கள், கருட கம்பியை இடித்து அகற்றினர்.



இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோயில் இடிக்கப்படுவதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...