கோவை மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களில் ரூ.121 கோடி வரி வசூல்..!

மேலும், மீதமுள்ள ரூ.252 கோடியை இந்த நிதியாண்டிலேயே வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 8 மாதங்களில் மாநகராட்சியில் 121 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி விதிப்பு இனங்கள் உள்ளன.

நடப்பு 2021 - 22 ஆம் நிதியாண்டில் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு தொகை இரண்டும் சேர்த்து மொத்தம் ரூபாய் 373 கோடி வரை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் ரூ.121 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது:-

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 100 சதவீத வரி விதிப்பு என்பதே இலக்காக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் கொரோனா தாக்கம் உள்ளிட்ட காரணங்களினால் 93 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் முழு இலக்கை எட்ட கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரை நிதியாண்டில் முடிந்ததிலிருந்து வரிவசூல் வேகப்படுத்தி உள்ளோம்.

இதற்காக வரி வசூலிப்பு மையங்களில் தேவையான நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரித் தொகை நிலுவை உள்ளவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 121 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 33 சதவீதம் ஆகும்.

மேலும், மீதமுள்ள ரூபாய் 252 கோடியை இந்த நிதியாண்டிலேயே வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...