ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் மாவு மில்களில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் வட மாநிலத்தவர்களுக்கு ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், மாவு மில்களில் ரேஷன் அரிசி அதிக அளவில் பதுக்கி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, குடிமைப்பொருள் வட்டாட்சியர் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாஸ்கோ நகர், கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவு மில்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.