பொள்ளாச்சி அருகே சாலை போடும் பணியை கிடப்பில் போட்ட நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

விரைவில் சாலை போடும் பணியை முடிக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சாலை போடும் பணியை கிடப்பில் போட்ட நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகராட்சியின் 34வது வார்டு உட்பட்ட குறிஞ்சி நகர், லட்சுமி நகர், வடிவேல் கண்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜல்லி கற்களை கொட்டி பரப்பிவிட்டதுடன் சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல், தொடர் மழை என அடுத்தடுத்த காரணங்களை மட்டுமே கூறிய நகராட்சி நிர்வாகம், சாலை போடும் பணியை தொடரவில்லை.



இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. வார்டு தலைவர் விவேக் தலைமை வகித்தார். நகரத் தலைவர் மணிகண்ட குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விரைவில் சாலை போடும் பணியை முடிக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தயாராக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...