கோவையில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத சேலம் அரசு பஸ் ஜப்தி..!

ரூபாய் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 496 இழப்பீடு தொகை அளிக்கப்பட்ட உத்தரவை மதிக்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.



கோவை: கோவையில் விபத்து ஏற்படுத்தியதால் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத சேலம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45), இவர் கடந்த 2016 மே மாதம் 5ம் தேதி சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார்.

இதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு அளிக்க வேண்டும் என சந்திரசேகரின் மனைவி பிரபா என்பவர் கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரூபாய் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 496 இழப்பீடு தொகை அளிக்க உத்தரவிட்டார். ஆனால் இந்த தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் தரவில்லை.

இதையடுத்து, இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி நேற்று காந்திபுரத்தில் இருந்து சேலம் செல்ல நின்ற குளிர்சாதனப் பேருந்தை கோர்ட் அமீனா மூலம் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...