இந்த இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டமானது கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள SBI வங்கியில் நடைபெற்றது.
கோவை: கோவையில் இரண்டாவது நாளாக அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசு நடவடிக்கையை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு சில தினங்களாகவே அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அரசு வங்கி ஊழியர்கள் சார்பில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டகளை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அரசு வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த நிலையில், நேற்று முதல் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
நேற்று இரயில் நிலையம் எதிரில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் முதல் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டமானது ரயில் நிலையம் அருகில் உள்ள SBI வங்கியில் நடைபெற்றது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் வங்கிகள் தனியார்மயமாக்கும் முடிவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.