கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 6,471 தன்னார்வலர்கள் பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

மேலும், பதிவு செய்துள்ள தன்னார்வலர்களின் முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 6,471 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கு 6,471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்று ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தவுள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு ராஜவீதி, துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இதனை தொடங்கிவைத்து ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் கூறியதாவது:

கொரோனா பொது முடக்கத்தால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு சாா்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை மாணவா்களின் இல்லங்களுக்கே சென்று பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 2,089 பகுதிகளில் 1 லட்சத்து 64 ஆயிரம் மாணவா்கள் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனா். இவா்களுக்கு பாடம் நடத்த 8 ஆயிரத்து 200 தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது வரை 6 ஆயிரத்து 471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனா்.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த மாவட்டம், ஒன்றிய அளவிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இல்லம் தேடிக்கல்வி செல்ஃபோன் ஆப் மூலம் தன்னார்வலர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். பதிவு செய்துள்ள தன்னார்வலர்களின் முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என். கீதா, மாவட்ட கல்வி அலுவலர் (பேரூா்) ஏ.எம். பழனிசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி ஒருங்கிணைப்பாளர் கே. லெனின்பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...