கோவையில் 45 பவுன் தங்க நகைகளுடன் நகை பட்டறை உரிமையாளர் மாயம்; மோசடி வழக்கு பதிவு..!

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை உரிமையாளர் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் ரோடு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ். புரம் அருகே உள்ள லோக்மான்ய வீதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 28. இவர் அந்தப் பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி இவர் தான் செய்த 45 பவுன் தங்க நகைகளை பாலிஷ் போடுவதற்காக, டி.கே வீதியில் உள்ள பட்டறை வைத்து நடத்தி வந்த சவரப் ஜோக்ஸ் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, நகை கொடுத்து, நீண்ட நாட்களாகியும் பாலிஷ் போட்டுக் கொடுக்காததால், சந்தேகமடைந்த சதிஷ் குமார், சவரப் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால், மேலும் சந்தேகமடைந்த சதிஷ், பாலிஷ் போடும் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது, அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உரிமையாளர் கடையை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, சதிஷ் குமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து 45 பவுன் தங்க நகைகளுடன் மாயமான நகை பட்டறை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...