புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி வைத்து, மாதம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கோவையில் உடையாம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மில் ஒன்றில் வடமாநில பெண் ஒருவரை விடுதியின் காப்பாளர் மற்றும் மில்லின் மேலாளர் தாக்கும் வீடியோ கடந்த ஐந்தாம் தேதி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்தும் மேலும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட பொது ஒப்பந்தம் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
CITU மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
1. கோவையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் காப்பதற்காக 1971, 1981 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி வைத்து மாதம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.
3. தொழிலாளர் நல சட்டங்களை அமல் ஆக்குவதற்கு தொழிற்சாலைகளை ஆய்வு செய்திட வேண்டும்.
4. தொழிலாளர்கள் தங்கும் இடங்களை தரமான குடியிருப்புகளாக மாற்ற வேண்டும்.
5. கேரளாவைப் போல் வடமாநில தொழிலாளர்கள் விருந்தினர் தொழிலாளி என தமிழக அரசு அழைத்திட வேண்டும்.
உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.