பயிற்சிக்கு சென்ற இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு கரியஞ்சோலை பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: இமாச்சல பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, இங்குள்ள வனப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் பயிற்சிக்காக வருவதும் வழக்கம்.
இந்நிலையில், நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள வனச்சரக அலுவலர்கள் 41 பேர் பயிற்சிக்காக சென்றனர். அங்கு சென்ற வனத்துறை அலுவலர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக, உதவி வனப்பாதுகாவலர் செல்வம் மற்றும் பயாலிஸ்ட் பீட்டர் ஆகியோர் பசுமை காடுகளை பராமரிப்பது, வனவிலங்குகளை கண்காணிப்பது, போன்ற பயிற்சிகளை வழங்கினார்.
மேலும், பயிற்சிக்கு சென்ற இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு கரியஞ்சோலை பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் சூழல் சுற்றுலா, மூலிகை வனம், கோழிகமுத்தி யானைகள் முகாம், டாப்சிலிப்பில் உள்ள உண்டு உறைவிட பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வளர்ப்பு யானைகளை பராமரிப்பு முறை குறித்தும், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.