கோவை உட்பட வேலூர், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தமிழகம் முழுவதும் 69 இடங்களில் காலைதொடங்கினார். மனைவி மகன் மீது வழக்குப் பதிவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் இன்று காலை 6.30 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில்அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவருடைய மனைவி சாந்தி, மகன் தரணிதரன், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இந்த ரெய்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, இன்று காலை 6.30 மணி அளவில், நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உட்பட வேலூர், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், ரெய்டு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் விஜயபாஸ்கர், வேலுமணியை தொடர்ந்து தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.