கோவை வெள்ளலூர் பேரூராட்சி, ஆலயம் அவென்யூ, மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் இன்று துவக்கப்பட்டது.
கோவை: ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திட்டதின் படி, தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தல், குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவீத பிரித்தலை உறுதி செய்து, குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவது, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்துதல், நீர்நிலைகள் மீட்டெடுப்பது, பூங்காக்கள் அமைப்பது, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதி, மரம் நடுதல், பள்ளிக் கட்டிடங்கள், மருந்தகங்கள், நூலகங்கள் மேம்படுத்துவதற்கு என பல்வேறு மக்களுக்கு தேவையான திட்டங்கள், அதில் அடங்கும்
அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில் கோவை வெள்ளலூர் பேரூராட்சி, ஆலயம் அவென்யூ, மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் இன்று துவக்கப்பட்டது.
திட்டத்தை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரக் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.