உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக அரசு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



கோவை: கோவையில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கம் சார்பில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த தொகையானது செலவுக்குப் போதுமானதாக இல்லை.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையும் வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...