சபரிமலை சிறப்பு ரயில், திருப்பூரில் நிற்காது: ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி

முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர். நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சபரிமலை சிறப்பு ரயில், திருப்பூரில் நிற்காது என்ற அறிவிப்பு, ஐயப்ப பக்தர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

தெற்கு, மத்திய ரயில்வே இணைந்து சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்டது.

செகந்திரபாத் - கொல்லம் இடையே ஒன்று, கச்சிக்குடா - கொல்லம் இடையே இரு ரயில்கள் வரும், 17, 19 மற்றும், 20-ம் தேதி முதல் இயங்கப்படுகிறது. மூன்று ரயில்களும் தெலுங்கானா மாநிலத்தில் புறப்பட்டு, காட்பாடி வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது.

சேலம், ஈரோட்டில் நின்று, கோவை வழியாக பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயத்தைக் கடந்து கொல்லம் செல்கிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவுக்கு சென்ற பக்தர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

3-ரயில்களும் ஈரோட்டில் புறப்பட்டு நேராக, கோவை சென்று சேரும்; திருப்பூரில் 3 ரயில்கள் நிறுத்தம் கிடையாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சிலர் கூறுகையில், 'முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.

நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...