கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், மேற்படி புகையிலை பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையாகக் கோவை மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்துத் தேடிவந்த நிலையில் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர்கள் மதிவண்ணன், குப்புராஜ் மற்றும் தலைமைக் காவலர் ரவி(HC-576)வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா, போன்றவற்றைக் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காகப் புகையிலை பொருட்களை எடுத்து வந்த மதுக்கரை சீராபாளையம் புதூர், சிலம்பரம் என்பவரது மகன் திருபுகழ் (வயது-38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 22 கிலோகிராம் எடையுள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல், கோட்டூர் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காலேப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி விரைந்து சென்று கோட்டூர் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை ஒரு பையில் வைத்து விற்பனை செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த, திருநீலகண்டர் தெரு, முகமது இக்பால் என்பவரது மகன் முகம்மது அப்பாஸ் (வயது-27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 1000/- பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...