கிணத்துக்கடவில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


கோவை: கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பாகக் காணப்பட்டது.

கிணத்துக்கடவு கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு மணிகண்டபுரம், கிருஷ்ணசாமிபுரம், நல்லட்டிபாளையம், சிங்கையைபுதூர், தாமரைக்குளம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மூன்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாகத் தாக்கிக் கொண்டனர். மேலும் 3-மாணவர்களுக்கும் ஆதரவாக மேலும் சிலர் மாணவர்கள் அடிதடியில் ஈடுபட்டதாக தெரிக்கிறது.

இதனால் காய்கறி சந்தை வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தகராற்றில் ஈடுபட்ட 12-ம்வகுப்பில் அறிவியல் மற்றும் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் 12-பேரை அழைத்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், அங்கு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் நலன் கருதி பள்ளி நிர்வாகம் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...