திருப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபரிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்த நிலையில், பொதுமக்கள் கற்களைக் கொண்டு தாக்கியதால் செல்போன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபரிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்த நிலையில், பொதுமக்கள் கற்களைக் கொண்டு தாக்கியதால் செல்போன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மன்னரைப் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மன்னரை பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து அவரின் செல்போனை பிடுங்க முயற்சித்தனர்.

செல்போனை குட்டி விடாமல் பிடித்திருந்த நிலையில், கத்தியால் அவரின் கையை கிழித்துள்ளனர். இதில் சிறிது காயம் ஏற்பட்டு அவர் சுதாரித்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து கூச்சலிட்ட வாரே ஓடிய நிலையில், அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகிலிருந்து பொதுமக்கள், செல்போன் கொள்ளையர்கள் மீது கற்களை எடுத்து வீச கொள்ளையர்கள் இருவரும் வாகனத்தில் தப்பிச்சென்றனர்.
இதனிடையே காயமடைந்த குட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற இரு கொள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.