கோவையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இஆப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 57க்குட்பட்ட மசக்காளி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் இடத்தினை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள், Propel Industries பங்களிப்புத் தொகையாக வழங்கிய ரூ.26 இலட்சத்துடன் 50% தொகையை தமிழக அரசின் பங்களிப்பு என மொத்தம் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், கழிவறை கட்டிடங்கள் கட்டவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார்.



தொடர்ந்து வார்டு 64 க்குட்பட்ட கோ - ஆப்பரேட்டின் காலனி பிரதான சாலையில் 600 மீட்டர் தொலைவிற்கு முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை அமைக்கும் பணியையும், 24x7 குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் உடனடியாக செய்து முடித்த பின்னர், Perks school சாலையில் (Tamil nadu Urban Road Infrastructure Project (Turip)) தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.61 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கவுள்ள (480 மீட்டர் தொலைவுக்கு 9.30 மீட்டர் அகலம்) இடத்தை நேசில் பார்வையிட்டு ஆய்வு செய்து பழுதாகியுள்ள சாலைப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுநிதியிலிருந்து ரூ.15.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்படும் வகுப்பறை கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வரதராஜபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம் மற்றும் மாநகராட்சி வரிவசூல் மையத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் எழில், சத்யா, சரண்யா, ரவி, மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...