திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 9-கோடி மதிப்பீட்டில் உயிர் தர விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 9-கோடி மதிப்பீட்டில் உயிர் தர விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் 19- பாடப்பிரிவுகளில் 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள 11.2-ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 9-கோடி மதிப்பீட்டில் உயர்தர விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் வருங்காலத்தில் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரும் பட்சத்தில் அதற்கான வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டுவதற்கு இடம் தேவை என்பதால் கல்லூரி வளாகத்திற்குள் மைதானம் கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விளையாட்டு மைதானம் அமைக்க முன்னாள் மாணவர்கள், தற்போது கல்வி பயின்று வரும் மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையிலும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதைக் கண்டித்தும் உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட்டு வேறு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.