திருப்பூரில் தனிமனிதரின் எதிர்ப்பால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் அவதி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!

உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் தனிமனிதரின் எதிர்ப்பால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் சிரமப்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அங்காளம்மன் நகர் பெருந்தொழுவு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு சிலர் மின் கம்பங்கள் நடப்படும் இடம் தங்களின் சொந்த இடம் என கூறியதால் மின் கம்பம் நடும் பணி நிறுத்தப்பட்டது.

முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அளிக்கப்பட்டு மாற்று வழியில் மின் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்த பிறகே 10 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது அதில் ஒரு சிலர் அவர்களின் சொந்த இடத்தில் அமைத்தனர்.

இதனிடையே, தனி மனிதர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மின் இணைப்பு கிடைக்காமல் போனது.



இதனால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இன்றி தவித்து வருவதாகவும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...