தற்போது விடுபட்ட 2,400 மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடப்பதாகவும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 99 சதவீதம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
கொரோனா பாதிப்பின் காரணமாக, தடுப்பூசி போடும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த அக்டோபர் 27-ம் தேதி துவங்கியது. இந்த தடுப்பூசி முகாமின் மூலம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 800 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 21 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதையடுத்து, தற்போது விடுபட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி கூறும் போது:-
கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 800 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், தற்போது வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 400 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதாவது, 99 சதவீத மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, தற்போது விடுபட்ட 2,400 மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்'' என்றார்.