மாரிதாஸ் வாழ்க..! DMK ஒழிக..!மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் எழுதி வந்தவரால் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!

நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "DMK ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் மாரிதாஸ் என்ற யூடியூபர் சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.



இதையடுத்து, கைது சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும், பொதுமக்களுக்கும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் அவரது நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனையடுத்து, உடனடியாக அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பேரூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...