கோவை சூலூர் அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகள் தீவைத்து அழிப்பு..!

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.


கோவை: கோவை அருகே குட்டையில் வளர்ந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் ராமையன்குட்டை உள்ளது. இங்கு, கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற எஸ்.ஐ.,க்கள் நவநீதகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், மூன்றடி உயரத்தில்,

ஆங்காங்கே சில கஞ்சா செடிகள் இருப்பதை கண்டனர். உடனடியாக, அவற்றை, தீயிட்டு அழித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பாப்பம்பட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் சுற்றி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கஞ்சா புகைத்து விட்டு, மீதியை வீசி செல்கின்றனர். அதில் இருக்கும் விதைகள், மழையால் செடிகளாக வளர்ந்துள்ளன.

குட்டைகள் மற்றும் சமுதாயக் கூடம், சாலை ஓரங்கள் என பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை கண்டறிந்து முழுமையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...