மேலும், தினமும் 4 குழுக்களாக, ஒவ்வொரு குழுவிலும் தலா 150 பேர் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை குற்றாலம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்வரத்து குறைந்துள்ளதால் நாளை (டிசம்பர் 14) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறும்போது,
“கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு வருபவர்களை 4 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேர், காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.