கோவையில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவை: கோவையில் 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக, சிறுவன் ஒருவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள தன்னுடன் படிக்கும் சக வகுப்பு மாணவனுடன் நட்பாக பழகி உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவனின் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின், அந்த மாணவி நோட்டு வாங்குவதற்காக மாணவனின் வீட்டுக்கு வந்துள்ளார். அதைப் பயன்படுத்தி, திருமண ஆசை வார்த்தை காட்டி, அந்த மாணவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் மாணவி அந்த மாணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போதும், அந்த மாணவியை ஏமாற்றி அந்த மாணவன் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அந்த மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்த பெற்றோர்,
அவரை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, மாணவியை பரிசோதித்த மருத்துவர், மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரிக்கையில் நடந்த சம்பவம் பற்றி மாணவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். கோவையில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
பள்ளி வயதில் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதால் அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும் என்ற விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற குற்றங்களில் மாணவ மாணவியர் ஈடுபட்டு வருவதாக குழந்தை பாதுகாப்பு குறித்து ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.